மனிதக்கழிவுகளை அகற்றும் இயந்திரம்… தொகுதியில் அறிமுகப்படுத்திய உதயநிதிக்கு குவியும் பாராட்டு…
வெளிநாடுகளில், மனித கழிவுகள், சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணிகளிளில் தானியங்கி இயந்திரங்கள் செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் மனிதர்கள் செய்யும் நிலை காலங்காலமாக நடந்து வருகிறது. அவ்வாறு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் கொடுமைகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், மனிதக்கழிவுகளை இயந்திரத்தின் மூலம் அகற்றும் முறை, மாநிலத்திலேயே முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது அறிக்கையில், மனிதர்களைக் கொண்டு கழிவு அகற்றும் முறை ஒழிக்கப்படும் என்று வெளியிட்டிருந்தது. தற்போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் என்றும், அதன்படி இயந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் இயந்திரத்தை முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
