ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்தவர்… இளம் பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிப்பு…
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்டபோது அதை வீடியோ எடுத்த 18 வயதான இளம் பெண்ணுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அமெரிக்காவில், கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் அதிகாரி ஒருவர், ஃப்ளாய்ட்-ன் கழுத்தில் தனது முழங்கால் கொண்டு அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இதனை வீடியோ எடுத்தவர் ட்ரானெல்லா ஃபிரேசியர் என்ற இளம் பெண். ஜார்ஜ் ஃப்ளாய்ட்-ன் கொலை வெளி உலகுக்கு தெரிய வைத்தது அவரது வீடியோதான். காவலரின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. தற்போது வீடியோவை பதிவு செய்த இளம் பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு, உலகின் உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
