அதிமுகவுக்கு சாதகமாக செயல்படாதவர்தான் சசிகலா… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ…
கடந்த சட்டமன்ற தேர்தலில அதிமுகவுக்கு சாதகமாக சசிகலா செயல்படவில்லை என்றும், அவரது விவசாரத்தில் ஓபிஎஸ்-ம், ஈபிஎஸ்-ம் இணைந்து முடிவெடுப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தாலும், அதிமுகவில் பொது செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை எடுத்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில அதிமுக தோல்வி முகம் கண்ட நிலையில், அதிமுகவை கைப்பற்ற சசிகலா அரசியலில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அது தொடர்பான நடவடிக்கையில் சசிகலா ஈடுபட்டுள்ளதாகவே அவரது ஆடியோ பேச்சு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையி, சசிகலா கடந்த சில தினங்களாக, அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். நான் விரைவில் வந்துவிடுவேன் என்றும், அனைத்தையும் சரி செய்து விடலாம் என்றும் உற்சாகம் அளிக்கும் வகையில் அதிமுகவினருடன் பேசி வருகிறார். அவரதுஇந்த ஆடியோ பேச்சால் அதிமுகவில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்கடும் காட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அதிமுகவில் இல்லை என்றும் அமமுகவினருடன்தான் அவர் பேசி வருவதாகவும் கூறினார். இதேபோல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு சாதகமாக சசிகலா செயல்படவில்லை என்றும், சசிகலா விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார். திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்களிலேயே அரசை விமர்சிப்பது எதிர்கட்சிக்கு சரியல்ல என்றும் கடம்பூர் ராஜூ கூறினார்.
