சுற்றுச்சூழல் தினம் கொண்டாடிய பிறகு வெட்டப்பட்ட மரங்கள்… வெட்ககேடான செயல் என பாஜக கண்டனம்…
உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடிய மறுநாளே 30 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இது வெட்கக்கேடான செயல் என்று பாஜக மூத்த தலைவர் பிரவீன் தாரேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட அடுத்த தினமே மும்பை, ஓர்லியில் உள்ள 30 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்திற்குப் பிறகு மரங்கள் வெட்டப்பட்டதற்கு, மகாராஷ்டிர மேலவையின் எதிர்கட்சி தலைவரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிரவீன் தாரேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடிய ஒரு நாள் கழித்து மரங்கள் வெட்டப்பட்டது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றார். ஓர்லியில் சுமார் 25 முதல் 30 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுற்கு கண்டனம் தெரிவித்தார். இது எங்கள் தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும், சுற்றுச்சூழலுடன் தொடர்புடையது. இந்த பிரச்சனையை ஆராய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பை பாஜகவை சேர்ந்த மங்கல் லோதா கூறுகையில், ஒரு சாமானிய மனிதன் ஒரு இலை பறித்தால்கூட வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த பதுக்கல் கும்பல் கடந்த பல ஆண்டுகளாக மும்பையில் செயல்பட்ட வருவதாக தெரிவித்தார். மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் துணை கமிஷனர் பரம்ஜித் சிங் தஹியா முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்,
