தமிழ்நாடு

+2 தேர்வு முடிவில் தமிழக முதல்வருக்கு நூற்றுக்கு நூறு…! முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்துதள்ளிய வைரமுத்து !

பல ஆலோசனைகளுக்கு பிறகு +2 தேர்வை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு கவிஞர் வைரமுத்து அவரது பாணியில் அழகிய கவிதை மூலம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “

+2 பொதுத் தேர்வு என்றஉளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.

+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் 2 ம் அலை காரணமாக மத்திய அரசு +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் +2 தேர்வை நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலரும் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து நேற்று தமிழக அரசு +2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.