அடி தூள் ! ’ஜகமே தந்திரம்’ படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயணன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் .
இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் வெளியீட்டு தேதி எப்போது என்பது தான் .

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என்று இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டரில் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் மீதமுள்ள பாடல்களை கேட்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
