உலகம்

மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா தேர்வு

69-வது ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெற்றது .

74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்:  இந்தியப் பெண்ணுக்கு 4-வது இடம் | Andrea Meza of Mexico crowned 69th Miss  Universe ...

கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, மிஸ் யுனிவர்ஸ் அழகிக்கான தேர்வை அறிவித்தவுடன் ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டு, கண்ணீர் விட்டார். மெஸாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் அழகி மகுடத்தை ஜோஜிபினி டுன்ஸி சூட்டினார்.

2-வது இடம் பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமாவுக்குக் கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றார்.

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகிகள் செஷ்லி கிறிஸ்ட், பவுலினா வேகா, டெமி லீ டெபோ ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3-வது முறையாக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2010இல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991இல் லுபிடா ஜோன்ஸும் கைப்பற்றினர். ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக முடிசூடப்பட்டார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியப் பெண் அட்லின் கேஸ்டிலினோ 4-வது இடத்தைப் பெற்றார்.