சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் !

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிவடந்ததை அடுத்து ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், பின்னர் காரில் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது கொல்க்கத்தாவில் நடைபெற உள்ளதாக படகுழு தெரிவித்துள்ளது.

முதல் அலை முடிந்து கட்டுப்பாடுகள் தளர்த்தியதும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கியது. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் முன்புதான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்பட்டது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு. ரூபன் எடிட்டிங்கை கவனிக்கிறார். நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.