அரசியல்தமிழ்நாடு

தமிழக 16-வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் : புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது . இதில் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி பெற்றதையடுத்து, கடந்த 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. 

இந்நிலையில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது . இதில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர் . 

உறுப்பினர்கள் அனைவரும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முன்னதாக கு.பிச்சாண்டிக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து, திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.