Covid19சினிமா

கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் திரையுலக பிரபலங்கள் பலரும், அவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா நிவாரணத்திற்காக நன்கொடை அளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் நடிகர் ஜோக்கர் துளசி காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.