கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக முதலமைச்சாராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளில் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில், மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது கொரோனாவிற்கு தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
அதற்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை திட்டத்திற்க்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
