தமிழ்நாடு

மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதே சமயம் இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிறு முழு ஊரடங்கின்போது ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.