Covid19இந்தியா

“மே 10 முதல் கர்நாடகாவில் முழு ஊரடங்கு ” – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது.

காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பலனளிக்காததால் தற்காலிகமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.