வணிகம்

(05-05-2021) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (05-05-2021) , பெட்ரோல் லிட்டருக்கு 92.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.09 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரங்களில், இதில் மாற்றம் இருக்கும். தமிழகத்தில், 19 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.