மக்களின் அலட்சியத்தால் தொடர்ந்து கொரோனா பரவுகிறது – WHO இயக்குனர் தகவல்!
மக்களின் அலட்சியத்தால் தொடர்ந்து கொரோனா பரவுகிறது எனவும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலித்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே மக்களின் அலட்சியத்தால் தொடர்ந்து கொரோனா பரவுகிறது எனவும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அவர் ஜெனிவாவில் செய்தியலாளர்களிடம் பேசியது; பல நாடுகளில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கூட கொரோனா நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பல நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், கொரோனா பரவலுக்கு மக்கள் அலட்சியம் தான் காரணமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம் என டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
