விளையாட்டு

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது..! கொல்கத்தா இலக்கு எத்தனை ரன்களாக இருக்கும்..?

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு அணி தங்கள் முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. அதே போல் கொல்கத்தா அணி தங்கள் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.

இதில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வென்றும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வெற்றியை நழுவ விடாமல் தக்கவைக்க கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.