அரசியல்தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை..! பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது.

அப்போது ஓ. பன்னீர் செல்வம் அளித்த பதிலில் கூறியதாவது:

2011-12 அதற்கு பின் சசிகலா, அவரின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலும் இல்லை.

சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான் என சசிகலா தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.

குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்த போது எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்க ஜெயலலிதா கூறினார்.

முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கவர்னரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார்.

ஓபிஎஸ் தான் முதல்வர் எனவும், அவரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதா கூறியபோது அழுது கொண்டிருந்த என்னை நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.