விளையாட்டு

வாஷ் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்..! தாய் மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி..

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி மைதானத்தில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் அணியில் வொயிட்வாஷ் செய்து தாய் மண்ணில் கெத்து காட்டியுள்ளது .

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த 2 ஒருநாள் போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது .

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி . தீபக் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணையின் வெற்றிக்கு வித்திட்டனர்.