அரசியல்தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : கோவில்பட்டியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் கனிமொழி எம்பி..

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவில்பட்டி நகராட்‌சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (08/02/2022) செவ்வாய்கிழமை, கோவில்பட்டியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன், நகரச் செயலாளர் கருணாநிதி, மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் காமராஜ், காங்கிரஸ் நகரத் தலைவர் அருண்பாண்டியன், CPI மாவட்ட செயலாளர் அழகு முத்துப்பாண்டியன், CPI நகரச் செயலாளர் சரோஜா, CPM சீனிவாசன், CPM நகரச் செயலாளர் ஜோதிபாசு மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.