விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி : 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி…

14 வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது . அதில் ஆன்டிகுவாவில் நேற்று அரங்கேறிய கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதிக்கொண்டன .

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது .

இங்கிலாந்து அணி என்னதான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தாலும் , இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி 47.4 ஓவர்களில் 195 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றி பெற்றது.

கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜூனியர் உலக கோப்பைகளில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அதிக முறை ஜூனியர் உலககோப்பையை வென்ற அணி எனும் சாதனை படைத்துள்ளது.