ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : 6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..
19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது.
இதில் டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத் மற்றும் ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனவ் பராக், சித்தார்த் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதனால் மீதியிருக்கும் 11 வீரர்களுடன் இந்திய அணி விளையாடியது.
