அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு..!
அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்தை விட கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
