இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .
2022 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் இதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சானியா மிர்சா இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களும் விளையாட்டு துறை சார்ந்தவர்க்ளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
