கடற்படை கப்பலில் வெடிவிபத்து..! மும்பை போலீசார் தீவிர விசாரணை…
கடற்படை கப்பல் தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பலின் உள்பகுதியில் நேற்று(ஜன.,18) வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். கப்பலில் உள்ளவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை கடற்படை நியமித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் உள்ள கொலபா போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
