அரசியல்தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி தேர்தல் : ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 2-ந் தேதி கட்சி தலைமை வெளியிட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த ஐந்தாம் தேதி, அதிமுக விதிகளுக்கு உட்பட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதன் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் தாக்கல் செய்த மனு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருந்ததால், அந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான சி. பொன்னையன் அறிவித்தார்.