ரம்யா கிருஷ்ணனின் வருவகையால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்றாரா கமல்ஹாசன்..?
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் அட்டகாச தொகுப்பில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகாமராக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.
இதனால் அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் வெயிட்டான ப்ரோமோ ஒன்று வந்தது .

அதில் மருத்துவமனை டிவியில் இருந்து பேசுகிறேன் என்றும் எனக்கு உதவி செய்ய எனது தோழி முன்வந்துள்ளார் அவரை உங்களுக்கு ஆறுமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்று கூற நடிகை ரம்யா கிருஷ்ணன் முதல் முறை பிக் பாஸ் மேடையில் கெத்தாக காலடி வைத்தார் .
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் வருகையால் நடிகர் கமல்ஹாசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டார்களா என பல கேள்விகள் இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளது.
