அரசியல்சினிமாதமிழ்நாடு

ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் அற்புதமான திரைப்படம் அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது மேலும் ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் கூறியதாவது :

அனைத்து படைப்பாளிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்

அடித்தட்டு மக்களின் பிரச்னையை அற்புதமாக இப்படம் எடுத்துச் சொல்லியிருக்கிறது

படைப்பாளிகளும் யாருடைய மனதும் வருத்தப்படாமல் படைப்பை உருவாக்க வேண்டும் என்று ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .