விரிவடையும் ஜெய் பீம் பட பிரச்சனை..! நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!
சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. ஆனால் அதில் கூறப்படும் சில விஷயங்கள் தவறு என போராட்டம் பிடிக்கும் சில அரசியல்வாதிகளும் ஜாதி பிரியர்களுக்கு இன்று வரை இருக்கத்தான் செய்கிறார்கள் .
அந்தவகையில் அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்ற படம் ஜெய்பீம் . என்னதான் நல்ல வரவேற்பை பெற்றாலும் இப்போது சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கும் பெரிய எதிர்ப்புகள் ஒரு சமூகத்தினரிடம் இருந்து கடுமையாக வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் ஜெய்பீம் படத்திற்கும் சூர்யாவுக்கும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது என்ன விஷயம் என்றால் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது .
இந்நிலையில் தற்போது எதிர்ப்புகள் அதிகமாகியுள்ளதால் சூர்யா எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் அவருடனே சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
