சினிமா

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார்..!

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவர்க்கு வயது 46 .

நடிகர் புனித் ராஜ்குமார் காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார் .

நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பு செய்தி கேட்டு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் அவரது ஆத்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.