அரசியல்தமிழ்நாடு

திமுக அரசே இனியாவது நீட் பற்றி உண்மையை சொல்லுங்கள் – உயிரிழந்த மாணவன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூளையூரில் நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறந்த மாணவனின் உடலுக்கு முன்னாள் முதல்வரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகனை இழந்த துக்கத்திலிருந்த மாணவனின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து பேசிய அவர், ”இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை உணர்த்துங்கள். தேர்தல் பரப்புரையின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக கூறியது” என்று தெரிவித்துள்ளார்.