அடி தூள்..! இந்தியாவில் 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க காத்திருக்கும் அமேசான் நிறுவனம்..!
சென்னை, கோவை உள்பட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்த அறிவிப்பை அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் , 2025-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், கொரோனா காலத்திலும் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
