(01-09-2021) இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப் – 01), பெட்ரோல் லிட்டருக்கு 99.08 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.20 ரூபாய், டீசல் லிட்டர் 93.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 பைசாக்கள் குறைந்து 99.08 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 14 பைசாக்கள் குறைந்து 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
