அரசியல்தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி..! ஆலோசனை கூட்டத்தில் ம.நீ.ம தலைவர் புரட்சி உரை…

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும், எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ, அந்த வேகத்தில் எழுந்து நிற்போம் எனவும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசுகையில், ‛உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ, அந்த வேகத்தில் எழுந்து நிற்போம்,’ எனப் பேசினார்.