அரசியல்

“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 199 பேர் மீது வழக்கு”… அரசு பணியை நடத்த விடாமல் தடுத்ததால் நடவடிக்கை….

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 199 பேர் மீது பேர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்ப துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை, குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்ப துறை அதிகாரிகள் சோதனை மாலை 6 மணிக்கு முடிவுற்றது. எஸ்.பி.வேலுமணி வீட்டில், 12 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனை காரணமாக, எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினர் அதிகளவில் கூடினர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திமுக குறித்து முழக்கங்களை எழுப்பினர். ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்கர் சாவி மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வேறு பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடந்தபோது, அதற்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே செல்வராஜ், மகேந்திரன், அமுல் கந்தசாமி, எம்.எஸ்.எம். ஆனந்தன், கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம் மற்றும் ஓ.கே.சின்னராஜ் உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அதிமுக.,வினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.