அரசியல்

நெல்லை கண்ணன் மீண்டும் அவதூறு பேச்சு… காவல் நிலையத்தில் புகார்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

திருநெல்வேலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை கண்ணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்றும் பணமும் செலவழிக்கவில்லை என்றார். அப்போது நெல்லை கண்ணன், அவதூறான வார்த்தையை பிரயோகப்படுத்தியிருந்தார்.

கட்சியில் இருந்து 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர் ஆனால் செலவழிக்கவில்லை என்றும் கூட்டணி கட்சிக்கும் பணம் தரவில்லை. இதனால் திருநெல்வேலியில் தாமரை மலர்ந்து விட்டதாக கூறினார். நான் திருநெல்வேலியில் மூன்று முறை தேர்தலில் நின்று பார்த்துவிட்டேன். எனக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். எவனுக்காவது ஓட்டு போடுவர். என்று அவதூறாக நெல்லை கண்ணன் பேசியிருந்தார்.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி உமா மகேஷ்வரன், தொழில்நுட்ப அணி நிர்வாகி பலராமன் ஆகியோர், போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் அளித்தனர். நெல்லை கண்ணன், ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்தார். இந்த நிலையில் மீணடும் திமுக குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.