அரசியல்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு…

இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தில் கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பலர் கோரிக்கை வைத்ததை அடுத்து, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்மோடி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தரப்ப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், ராஜீவ் காந்தி பெயரும் புகழும் இந்த மண்ணில் இருக்கும் வரையில், அவரை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், பெயர் மாற்றம் என்பது சிறுபிள்ளைத்தனமான வேலை என்றுதான் கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியதாவது: புதிய விருதை உருவாக்கி தகுதியான பெயரை வைத்து விருது வழங்குவது பற்றி யாருக்கும் ஆட்சேபனையில்லை. ராஜீவ் காந்தி உலக மெங்குலும் உள்ள இளைஞர்களால் கவரப்பட்டவர். இந்திய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர். புதிய இந்தியாவிற்கு தகவல் தொழில் நுட்பத்தை, அறிமுகம் செய்து, தமிழ் மண்ணிலே பலியாகி இந்தியவின் இறையாண்மைக்கும் ஒற்றுக்கும் அடையாள சின்னமாக விளங்குகிறார்.

அவரது பெயரில் உள்ள விருதின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னால், அரசு எவ்வளவு பெரிய கல் நெஞ்ச அரசாக இருக்கும். மறைந்த தலைவர்களுக்கு செலுத்தக்கூடிய அடிப்படை மரியாதையைக் கூட செலுத்தவதற்கு அரசு தயாராக இல்லை என்பதை காண்பிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பெயர்களை மாற்றி மக்களை திசை திருப்புவதாக நினைத்தல் அது ஒரு நாளும் வெற்றி பெறாது. ராஜீவ் பேரும் புகழும் இந்த மண்ணில் தியாகம் வரலாறு இருக்கும் வரையில் நாட்டு மக்கள் மறக்க மாட்ர்கள். பெயர் மாற்றம் என்பது சிறுபிள்ளைத்தனமான வேலை என்றுதான் சொல்வேன்.

தலைவர்களைப் பற்றி மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், இப்படிப்பட்ட விருதுகள் வழங்கப்படும் போது, தலைவர்களின் தொண்டும் சேவையும் மக்கள் நினைவுக்கு வர வேண்டும் என்பது தான் விருதுகளுக்கு பின்னால் உள்ள தாத்பரியம். ஆனால், தலைவருடைய பெயரை அழித்து விடுவதாலேயே வரலாற்றை அழித்து விடலாம் என்று சொன்னால், அவர்கள் கற்பனையில்தான் வாழ்கிறார்கள். யதார்த்தத்தைப் பிரிந்து கொள்ளவில்லை. என்று பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.