வேளாண்மைதான் நாட்டுக்கு உயிர் – உடல்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…
வேளாண்மைதான் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ளது என்றும், வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கம் அரசாக திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேள்ண் துறைக்கு தமிக அரசு முக்கியத்துவம் தருவதாக கூறினார். எம்.எ1. சுவாமிநாதனின் ஆலோசனைகளைச் செயல்படுத்தியவர் கருணாநிதி என்றும், சட்டப்பேரவையில் முதல் முறையாக வரும் 14 ஆம் தேதி வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கல் தாக்கல் செய்யப்படுவதாக கூறினார்.
வேளாண் துறை என்பதை வேளாண்மை என்றம் உழவர் நலத்துறை என்றும் மாற்றி அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். காலநிலை மாற்றம் பெரும் அச்சத்தை உருவாக்கி வருவதாக கூறிய அவர், காலநிலை மாற்றத்தை மானுடத்துடன் மிக முக்கிய பிரச்சனையாக தமிழக அரசு கருதுகிறது என்றார்.
வேளாண்மையை லாபகரமான தொழிலாக உழவர்கள் நினைக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பசிப்பிணி ஒழிப்பை இலக்காக கொண்டு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
