மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி…
மறைந்த அதிமுக அவை தலைவர் மதுசூதனின் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், உடல்நலக் குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் – ஈபிஎஸ், அதிமுக நிர்வாகிகள், மாற்று கட்சியைச் சேர்ந்த கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தண்டையார்பேட்டைக்கு வந்த சசிகலா, மறைந்த மதுசூதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுக கொடி கட்டிய காரில் வந்த அவர் அஞ்சலி செலுத்திரனார்.

முன்னதாக மதுசூதனன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்திருந்தார்.
