குற்றம்

ஏடிஎம் இயந்திரத்தினுள் நுழைந்து பணம் திருட முயற்சி… பீகார் வாலிபர் கைது… போலீசார் விசாரணை…

ஏடிஎம் மையத்தில் கொள்ளை, ஏடிஎம் டெபாசிட் மையத்தில் நூதன கொள்ளை என பல்வேறு வகையில் ஏடிஎம் மையங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிப்பதற்காக சென்ற ஒருவர், ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்து பணத்தை திருட முயன்றுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், அணியாபுரத்தில் தனியா ஏடிஎம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த அவர்கள், ஏடிஎம் மையத்தில் சத்தம் கேட்டதை அடுத்து, மையத்திற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் மேல்பாகத்தை உடைத்து, அதன் உள்ளே உள்ள பண பெட்டகத்தை உடைக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த போலீசார், அவரை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலம் பேந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அருகில் உள்ள கோழிப்பண்ணையில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.