டோக்கியோ ஒலிம்பிக் : 41 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி ..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனி அணியை இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது .
1-3 என்று பின்னடைவு கண்டிருந்த இந்திய ஹாக்கி அணி பெரிய அளவில் எழுச்சி கண்டு 5-4 என்று அபார வெற்றி பெற்று 41 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு ஹாக்கியில் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது .
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பாஸ்கர் தலைமையில் இந்தியா கடைசியில் தங்கம் வென்றது அதன் பின் இப்போது 2020 டோக்கியோ ஒலிம்பிகில் ஹர்மன்பிரீத் தலைமையில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது .
இந்தியா தரப்பில் 17வது நிமிடத்தில் சிம்ரன் ஜித் சிங் முதல் கோலை அடித்தார். பிறகு ஜெர்மனி 2 கோல்களை அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு 27வது நிமிடத்தில் ஹர்திக், 29வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத், 31-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங், 34வது நிமிடத்தில் மீண்டும் சிம்ரன் ஜித் சிங் 5வது கோலை அடித்தார்.
இன்று அபாரமாக ஆடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவையும் இந்திய மக்களையும் பெருமையடைய வைத்துள்ளது .
