அரசியல்தமிழ்நாடு

“நக்சல் ஆகியிருப்பேன்”… வைகோ மகன் துரை வையாபுரி அதிர்ச்சி பேச்சு…

அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களைப் பார்த்தபோது, நக்சல் ஆகிவிடும் எண்ணம் உதித்ததாக, மாநிலங்களவை எம்.பி.யும், மதிமுக பொது செயலாளர் வைகோவின் மகனுமான துரை வையாபுரி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில், மதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில், திராவிட இயக்க பயிற்சி பாசறைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது என்றும், நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள், மக்களைக் குழப்பி வருவதாகவும் கூறினார்.

35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது, அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடியது. இது என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தியதாக கூறிய அவர், 45 வயதுக்குமேல் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சல் ஆகிவிடலாம் என்ற என்னம் தோன்றியதாக பேசியிருந்தார்.