அரசியல்தமிழ்நாடு

பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டியது நீதிமன்றத்தின் கடமை… தினேஷ் குண்டுராவ் பேட்டி…

பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும் என்று தமிழககாங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரசின் எதிர்கால செயல் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கஅலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்றும் இன்றும் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவது, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல் சூழ்நிலை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு, தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும் என்றார். வெளிநாடுகளில், இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கக்கூடிய நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றார்.

தீவிரவாதிகளை ஒட்டுக்கேட்கும் கருவிகள் மூலம் சொந்த நாட்டில், சொந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலையீடு இருப்பது தெரியவந்துள்ளது வேட்கக்கேடானது என்றார்.

பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் கூட எதிர்கட்சிகளின் குரலைக் கேட்டது. ஆனால் மோடி அரசு, தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாக கூறினார். பெட்ரோல் – டீசல் விலை உய்ரவு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், மேகதாது விவகாரத்தில் மேகதாது விவகாரத்தில் அந்தந்த மாநிலம் அவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருவதாக தினேஷ் குண்டுராவ் கூறினார்.