அதிமுகவில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம்… ஓ.பி.எஸ்., – ஈ.பி.எஸ். அதிரடி உத்தரவு…
தஞ்சை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரை கட்சியில் இருந்து அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவுக்கு எதிராக செய்லபடுபவர்களும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து, அதிமுக தலைமையால் நீக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேலும் 5 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி, அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செய்யப்பட்ட காரணத்தால் தஞ்சை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி., எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பரசுராமன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ராஜ்மோகன், தஞ்சை நகர கழக செயலாளர் பண்டரிநாதன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்.எம்.பாஸ்கர், ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் ஆகிய 5 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

