Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,947 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,193 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 56,843 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,947 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,57,611 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,72,85,251 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 1,109 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,94,251 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,63,322 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,193 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,02,627 ஆக உயர்ந்துள்ளது.