தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
- கட்டாயமாக உடல் வெப்ப நிலை பரிசோதனையை வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
- அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யலாம்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களைஅனுமதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல்
- நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்
- கொரோனா கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
