ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த லாவ்லீனா…
ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 64 – 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லாவ்லீனா மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஜாப்பான், டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லீனா (23) இந்தியாவுக்கான மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
காலிறுதிப் போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லீனா, சீனாவின் தைபேவைச் சேர்ந்த வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். லாவ்லீனா அரையிறுதி போட்டிக்கு நுழைந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.
அரையிறுதிப் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் வெள்ளி அல்லது தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. லாவ்லீனா தங்கப்பதக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் – வீராங்கனைகள் வெற்றி பெறுவது இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது.
