அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடு வியக்க வைக்கிறது… பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு…
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வியப்பாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார். தினம் தினம் ஒரு கோயிலுக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதன்படி கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை அவர் அதிரடியாக மீட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில், தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை அதிரடியாக மீட்டு வருகிறார். சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நடவடிக்கை அனைவராலும் வரவேற்கப்படும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வியப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு தெரிவித்தார். தினம் தினம் ஒரு கோயிலுக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இல.கணேசன், இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.
