தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!
தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியிட்ட தகவலின் படி . தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,53,805 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,394 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,98,289 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 21,521 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
