இந்தியா

“வேண்டும்… வேண்டும்… விவாதம் வேண்டும்”… நாடாளுமன்றத்தில் தமிழில் முழக்கமிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்…

மாநிலங்களவையில் விவாதம் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வேண்டும் வேண்டும் விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவைக் கூட்டத்தில் சட்டத்திருத்த மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படுவதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, வேண்டும் வேண்டும் விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் முழக்கமிடுவதுதான் வாடிக்கை ஆனால்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் மட்டுமல்லாது மற்ற மாநில எம்.பி.க்களும் வேண்டும் வேண்டும் விவாதம் வேண்டும் என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.

எதிர்கட்சியினரின் கடும் அமளிக்கும் இடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி, சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், எதிர்கட்சி உறுப்பினர்கள் தமிழில் முழக்கமிட்டது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜெயராம் ரமேஷ், தனது டுவிட்டரில், வழக்கமாக மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் முழக்கமிடுவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.