Uncategorized

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா…

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார்.கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக முதலமைச்சராக இருந்த நிலையில், எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துக்கள் கூறி வந்தனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர், பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பகிரங்கமாக எடியூரப்பாவை விமர்சித்து வந்தனர். எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேடும் எனவும் பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா கூறினார். இந்த நிலையில், ஆளுநரை சந்தித்த எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.